Tuesday, November 1, 2016

How Tamil got its name.

ஆங்கிலம் பேசி பீட்டர் விடுபவர்களுக்கு இதை எடுத்து சொல்லுங்கள்.

தமிழுக்கு "தமிழ்" என்று பெயர் எப்படி வந்தது ?
*****************************************************************
க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்,

உலக மனிதன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் "அ,இ,உ" என்பது பாவாணர் கருத்து. அதாவது முதல் மூன்று உயிர் எழுத்துகள்(குறில்).

வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அவை "த்,ம்,ழ்" என்பவை.

இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…

த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்

என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..!

* ஒரே எழுத்தில் பொருள் தருபவை ஆங்கிலத்தில் வெறும் 2 தான்.
I (நான்), a (ஒரு)
ஆனால் தமிழில்,
பூ,வை,பை,கோ,தை,அ,மா,போ,கை,ஆ,வா,மை,சோ,எ,தா........

*இங்கிலீஷ் கு ஆங்கிலம் என்று பெயர் வைத்தவன் தமிழன்.
ஆனால் தமிழுக்கு எல்லா மொழியிலும் தமிழ் என்றுதான் பெயர்.

*ஆங்கிலத்தில் முதலெழுத்து(Alphabetic) ஆப்பிளில் ஆரம்பிக்கிறது.
தமிழில் உயிரெழுத்தோ அம்மாவில் ஆரம்பிக்கிறது.

இப்படி தமிழின் பெருமைகளை சொல்லிகொண்டே போனால்,ஆயிரம் முகநூல்(FB) இருந்தாலும் போதாது எனக்கு

No comments:

Post a Comment